ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் போன்ற இரு பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்தனர். பின்பு 160 ரன்களை சுலபமாக அடித்துவிடாமல் என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

ஆமாம், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் நம்பிக்கை நாயகன் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் நம்பிக்கையான பார்னேர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.
இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி புள்ளிபட்டியலில் 0.050+ என்ற ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

இப்பொழுது இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியை பற்றி தான் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றனர். ஆமாம், அதுமட்டுமின்றி நேற்று தீபாவளி என்றதாலலும் இந்திய அணி வென்றதாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.
அதுமட்டுமின்றி பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல தான் தமிழகத்தில் பிறந்த சுந்தர் பிச்சை இப்பொழுது உலகத்தின் முன்னணி நிறுவனமான கூகுள் -ன் CEO ஆக பணியாற்றி வருகிறார். நேற்று அவரது (சுந்தர் பிச்சை) ட்விட்டர் பக்கத்தில் தீபாவளிக்கு வாழ்த்துக்களை மற்றுமின்றி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் இறுதி மூன்று ஓவர் மீண்டும் பார்த்து மகிழ்ந்தேன் என்று பதிவு செய்திருந்தார்.
Happy Diwali! Hope everyone celebrating has a great time with your friends and family.
🪔 I celebrated by watching the last three overs again today, what a game and performance #Diwali #TeamIndia #T20WC2022— Sundar Pichai (@sundarpichai) October 24, 2022
அதற்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ; முதல் மூன்று ஒவர்களையும் நீங்க பார்க்க வேண்டும் என்று பதிவு செய்திருந்தார். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணி முதல் மூன்று ஓவர்களில் இரு விக்கெட்டை இழந்து மோசமான நிலையில் விளையாடி கொண்டு வந்தனர்.
you should watch 1st three overs
— Muhammad Shahzaib (@Muhamma91436212) October 24, 2022
ஆனால் இந்திய அணியை விட்டுக்கொடுக்காமல் பதிலளித்த சுந்தர் பிச்சை ; ஆமாம், நான் முதல் மூன்று ஓவரை பார்த்தேன். அதில் புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷதீப் சிங் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்தனர் என்று பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான நிலையை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் சுந்தர் பிச்சை.
Did that too:) what a spell from Bhuvi and Arshdeep
— Sundar Pichai (@sundarpichai) October 24, 2022
0 Comments