இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மதியம் 1:30 மணியளவில் நடைபெற்று முடிந்தது. அதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் முதல் 10 ஓவர் சற்று நிதானமாகவே விளையாடி கொண்டு வந்த பாகிஸ்தான் அணி 11வது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட தொடங்கினார்கள்.
அதிலும் குறிப்பாக மசூத் மற்றும் அகமத் பார்ட்னெர்ஷிப் இந்திய கிரிக்கெட் அணியை திணறவைத்துள்ளது தான் உண்மை. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மசூத் 52*, அகமத் 51, ஷதாப் கான் 5, ஆசிப் அலி 2, ஷாஹீன் அப்ரிடி 16 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. பாகிஸ்தான் அணியை போலவே தொடக்கத்தில் மோசமான நிலையில் விளையாடிய கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் சிறப்பான பார்ட்னெர்ஷிப் காரணத்தால் இறுதிவரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றுள்ளனர். அதனால் குரூப் 2ல் இந்திய கிரிக்கெட் அணி முதல் இடத்தில் உள்ளனர்.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” சத்தியமாக எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சியமாக இது போன்ற எதிர்பார்த்து அனைவரிடமும் இருக்கும். அதுமட்டுமின்றி, இது போன்ற போட்டிகளில் இறுதிவரை நின்று விளையாட வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று.”

“முதலில் பவுலிங் சரியாக செய்தாலும், மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் வீரர்கள் (மசூத் மற்றும் அகமத்) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். மிடில் ஓவரில் இருந்து இறுதி வரை சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். எங்களுக்கு நன்கு தெரியும் பேட்டிங் எப்படி செய்யவேண்டுமென்று. இதில் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள்.”
“அதனால் அவர்களுக்கு எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டுமென்று நன்கு தெரியும். அதுமட்டுமின்றி, இது போன்ற போட்டிகளில் பொறுமையாக கையாளும் விதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உண்மையிலும் விராட்கோள்-க்கு தான் பாராட்டுகள். ஏனென்றால் அந்த அளவிற்கு சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். எனக்கு தெரிந்து இந்திய அணிக்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் மறக்க முடியாத போட்டியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
0 Comments