ஐபிஎல் 2022யின் 7வது போட்டி பேசும்பொருளாக மாறியுள்ளது தான் உண்மை. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50, ஷிவம் துபே 49 ரன்களை அடித்துள்ளனர்.
பின்பு 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை விளையாடிய லக்னோ அணி, பின்னர் போக போக ரன்களை அதிரடியாக விளையாட தொடங்கினார்கள். அதனால் 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது லக்னோ அணி.
200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தும் சென்னை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆமாம், சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் 19வது ஓவர் பவுலிங் செய்தது தான், அந்த ஒவரில் பவுலிங் செய்த ஷிவம் துபே 25 ரன்களை கொடுத்தார்.
அதனால் லக்னோ அணிக்கு சுலபமாக மாறியது. இதனை பற்றி பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ; ” நேற்று நடந்து போட்டியில் நயாகரா நீர்விழ்ச்சி போல தான் நடந்தது. அந்த போட்டியில் சுழல் பந்து வீச்சாளருக்கு பயன் இல்லாமல் போனது.”
லக்னோ அணி நீர்விழ்ச்சி போல ரன்களை அடித்துக்கொண்டே இருந்தனர். அந்த நேரத்தில் சுழல் பந்து வீச்சு சரியான பயன் அளிக்காது என்பது எனக்கு தெரியாது. ரவீந்திர மற்றும் மொயின் அலி போன்ற இருவரை தவிர்த்து சென்னை அணியில் சுழல் பந்து வீச்சாளர் யாரும் இல்லை.
அதுமட்டுமின்றி, ஷிவம் துபே -வை பந்து வீச்சை மிடில் ஓவர்களில் தான் திட்டமிட்டோம். எங்களுக்கு தெரிந்து ஒரு ஓவர் நிச்சியமாக போட்டியை மாற்றிவிடும் என்று. அந்த சூழ்நிலையை எதிர் அணியின் வீரர்கள் சரியாக பயன்படுத்தி விட்டனர். எங்கள் அணிக்கு இரண்டாவது பேட்டிங் தான் சரியாக இருக்கும்.
210 ரன்கள் அடித்தது சிறப்பான விஷயம் தான். உண்மையிலும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக தான் விளையாடியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெம்மிங். நாளை இரவு ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
அதில் ஆவது சென்னை அணி வெல்ல போகிறதா இல்லையா ?? லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய மைதானத்தில் தான் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளனர். உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பண்ணுங்க..!