சென்னை அணியில் இவருக்கு இனிமேல் வாய்ப்பு இருக்காது ; ப்ளேயிங் 11ல் சந்தேகம் தான் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 : கடந்த 26ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் நடந்த காரணத்தால் பல வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் தான் ஐபிஎல் 2022யின் முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்தது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கத்தில் 10 ஓவர் வரியா சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை.

பின்னர் தோனி மற்றும் புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜா பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதில் தோனி இறுதிவரை விளையாடி 50 ரன்களை ஆட்டம் இழக்காமல் விளையாடினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை அடித்தது சென்னை அணி.

பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சரியாக 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்து சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது கொல்கத்தா. இதில் சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக சிவம் துபே -வை பார்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் 4 கோடி விலை கொடுத்து சென்னை அணி கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் களமிறங்கிய சிவம் துபே 6 பந்தில் 3 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். அதேபோல பவுலிங் செய்த சிவம் துபே 11 ரன்களை கொடுத்துள்ளார், அதவும் ஒரு பவர் மட்டுமே பவுலிங் செய்துள்ளார்.

ஒருவேளை ஷிவம் துபே சரியாக விளையாடிருந்தால் வெற்றியை கைப்பற்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றனர். இருப்பினும், ஷிவம் துபே-க்கு பதிலாக அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய ராஜ்வரதன் ஹங்காரகேகர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் (ராஜ்வரதன் ஹங்காரகேகர்) சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை போட்டிகளில் விளையாடிய ராஜ்வரதன் 6 போட்டிகளில் 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இவர் இடம்பெறுபட்சத்தில் சென்னை அணிக்கு வலுவான பவுலிங் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க..! ஷிவம் துபே -க்கு பதிலாக இளம் வீரரான ராஜ்வரதனுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா ?? ப்ளேயிங் 11ல் யார் யார் விளையாடினால் சென்னை அணிக்கு வெற்றி கிடைக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..