ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் லீக் போட்டிகள் நடந்து முடிந்து இப்பொழுது அரை இறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் ஈயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதின.
அதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை 166 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மொயின் அலி 37 பந்தில் 51 ரன்களை அடித்துள்ளார்.
பின்னர் 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி. வாழ்வா சாவா என்று பேட்டிங் செய்ய தொடங்கியது நியூஸிலாந்து அணிக்கு தொடக்கத்தில் இரு விக்கெட்டை இழந்தது. ஆனால் , நியூஸிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மிட்சேல் இறுதி ஓவர் வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி 47 பந்தில் 72 ரன்களை விளாசியுள்ளார்.
அதனால் 19 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 167 ரன்களை அடித்து..! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. உலகக்கோப்பை போட்டியே இன்னும் முடியவில்லை. ஆனால் அதற்குள் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.
அதுவும் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. சமீபத்தில் தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விராட்கோலி, பும்ரா போன்ற முன்னனி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது…!
இந்திய அணியின் விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், ஆவேஷ் கான், புவனேஸ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது…! யார் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்க போவது என்று?
ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் என்று தான் அனைவரும் நினைத்து கொண்டு இருக்கின்றோம், அதுதான் உண்மையும் கூட…! ஆனால் இந்தமுறை ருதுராஜ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சிஎஸ்கே அணியை சேர்ந்த ருதுராஜ் பற்றி ஏதும் சொல்ல வேண்டியது இல்லை.
ஏனென்றால் ஐபிஎல் 2021 யில் அதிக ரன்களை கைப்பற்றி வீரரே ருதுராஜ் தான். பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் விளையாடிய சில போட்டிகளில் அதிக ரன்களை அடித்து மாஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று நிரூபித்துவிட்டார்.
அதனால் இவர்கள் இருவருக்கும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக இந்திய அணிக்கு சிறந்த ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் கிடைக்கும். அப்படி இல்லையென்றால் ரோஹித் சர்மா மற்றும் ருதுராஜ் களமிறங்கினால் அதிரடியான முறையில் அதிக ரன்களை அடிக்க நேரிடும்.
கிரிக்கெட் ரசிகர்களே நீங்கள் சொல்லுங்க..! நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 சீரியஸ் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஆக விளையாட வேண்டுமா ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!!