இவர் குறைந்தது 60 ரன்களை அடித்திருக்க வேண்டும் ; ஆனால் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர் ; கவாஸ்கர் பேட்டி ;

0

ஆசிய கோப்பை 2022: நேற்று நடந்த இரண்டாவது டி-20 லீக் போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கினார்கள். தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தனர்.

பின்பு இந்திய அணி 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியை போலவே தொடக்க ஆட்டம் மோசமாக தான் இருந்தது. இருப்பினும் 19.4 ஓவர் வரை போராடிய இந்திய அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 148 ரன்களை அடித்தனர். அதனால் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

இந்திய அணியின் சொதப்பல் ஆட்டம் :

இந்திய அணியின் பேட்டிங் செய்த தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. ரோஹித் சர்மா 12 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.

இருப்பினும் விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளனர். இதில் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி குறைந்தது 60 ரன்களை ஆவது அடித்திருக்க வேண்டுமென்று முன்னாள் வீரரான கவாஸ்கர் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் ” ராகுல் டிராவிட் வெறும் ஒரு பந்தில் ஆட்டம் இழந்தார், அதனால் அவரை பற்றி பேச எதுவும் இல்லை. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவருக்கும் போட்டியில் விளையாட நேரம் இருந்தது. இதில் அனைவரும் விராட்கோலி போர்மை பற்றி பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் அவருக்கு லக் இல்லையென்று நான் சொன்னேன்.”

“ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி-க்கு லக் இருந்தது. பல முறை பேட் எட்ஜ் பட்டது, ஒரு கேட்ச் மிஸ் ஆனது. அதனை புரிந்து கொண்டு சில முக்கியமான ஷாட்ஸ்-களை விளையாடினார் விராட்கோலி. ஆனால் விராட்கோலி ஆரம்பித்த விதம் நிச்சியமாக அவர் குறைந்தது 60 அல்லது 70 ரன்களை ஆவது அடிப்பார் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர்.”

“அதேபோல ரோஹித் சர்மா அவுட் ஆன நிலையில் விராட்கோலியும் விக்கெட்டை இழந்தார். எதிர்பார்க்க மாதிரியான ஷாட்ஸ் விளையாடிய காரணத்தால் இருவரும் ஆட்டம் இழந்தனர். அவர்கள் 19, 20 ரன்களை அடித்து கொண்டு இருக்கும் நேரத்தில் சிக்ஸர் அல்லது அப்படி பட்ட ஷாட்ஸ் அடிப்பது சரியான விஷயம் கிடையாது.”

அதனால் இனிவரும் போட்டிகளில் குறைந்தது 70 அல்லது 80 ரன்களை அடித்த பிறகு பெரிய ஷாட்ஸ் அடிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த பாடத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கவாஸ்கர் கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here