ஐபிஎல் 2021; மீதமுள்ள போட்டிகளில் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற போகின்ற 5 முக்கியமான வீரர்கள் ..! தோனிக்கு ஏற்பட்ட சிக்கல் ?

இந்திய கிரிக்கெட் எதிர்பார்ப்போடு காத்துகொண்டு இருக்கும் ஒரே போட்டி தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். ஏப்ரல் 10ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் தொடங்கியது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது பிசிசிஐ.

மே மாத தொடக்கத்தில் சில கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியில் 3 பேருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று உறுதியானது.

அதனால் பிசிசிஐ உடனடியாக போட்டிகளை ரத்து செய்து, அனைத்து வீரர்களையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது. சமீபித்தில் பிசிசிஐ வெளியிட்ட செய்தியில் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகளை தொடங்க உள்ளதாக பிசிசிஐ உறுதியாக கூறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளை வென்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு 2021வரை சிஎஸ்கே அணியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி.

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் தோல்வி மிகவும் மோசமான ஒன்றாக இருந்தது. அதன்விளைவாக ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறாமல் வெளியேறியது சிஎஸ்கே. ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

ஆனால் இப்பொழுது ஒரு சிக்கல் ஏற்பட்டடுள்ளது. அதாவது மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் சில வீரர்கள் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. அதில் சாம்கரண் , ப்ராவோ , ஜேசன், மொயின் அலி, மிச்சேல் சான்ட்னர் போன்ற வீர்ரகள் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு இல்லை.

ஏனென்றால் ப்ராவோ அந்த நேரத்தில் சிபிஎல் போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்த போதே, எங்கள் வீரர்கள் நிச்சியமாக மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

ஏனென்றால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பங்களாதேஷ் அணியும் மோத உள்ளதாக தகவல் வந்துள்ளது. அப்படி ஒருவேளை இது உண்மையாக இருந்தால் சிஎஸ்கே என்ன செய்ய போகிறது என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். தோனி என்ன செய்ய போகிறார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.