Play-off சுற்றுக்கு தகுதி பெற போகும் முக்கியமான நான்கு அணிகள் இதுதான் ; இது நம்ம List -லையே இல்லையே ;

0

ஐபிஎல் 2022:

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 65 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் ஒரு சில போட்டிகளுக்கு பிறகு ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது.

ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள அணிகள் ?

குஜராத் டைட்டன்ஸ் : ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டு தான் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆனது. ஆனால் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 10 போட்டியில் வென்று புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், இந்த ஆண்டு ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக திகழ்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் : சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தாலும், பின்னர் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை கைப்பற்ற தொடங்கியது. இதுவரை மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

வருகின்ற வெள்ளிக்கிழமை சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் : கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆன புதிய அணிதான். இதுவரை 13 போட்டிகளில் 8 போட்டியில் வென்றுள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள போகிறது லக்னோ. ஒருவேளை இதில் லக்னோ அணி வென்றால் நிச்சியமாக ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும்.

ஒருவேளை மோசமான நிலையில் தோல்வியை சந்தித்து, டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய இரு அணிகளும் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் பின்னர் லக்னோ அணிக்கு ஆபத்து தான் என்பதில் சந்தேகமில்லை.

டெல்லி கேபிட்டல்ஸ் : ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி, இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வென்று 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். இருப்பினும், சனிக்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது டெல்லி.

இதில் நிச்சியமாக டெல்லி அணி வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் பெங்களூர் அணியும் தோல்வி பெற்றால் தான் டெல்லி அணிக்கு ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் பெங்களூர் அணி தான் நான்காவது இடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு என்பது அதிமாக இருக்கும்.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க.. யார் யார் இந்த முறை ப்ளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here