இளம் சிங்கங்களை கொண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் ப்ளேயிங் 11 இதுதான் ; வெற்றி உறுதிதான் ?

0

நாளை இரவு 7 மணி அளவில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தசுன் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் முதல் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

Indian Team

இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். சமீபத்தில் தான் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் முக்கியமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும பிசிசிஐ ?

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் மோசமான நிலையி வெளியேறியுள்ளது இந்திய. இந்த முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் என்று எதிரிபார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. உலகக்கோப்பை போட்டியில் தோல்வி பெற்ற இந்திய அணிக்கு இதுவரை இல்லாத அளவிற்கு விமர்சனங்கள் எழுந்தது.

குறிப்பாக மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று பலர் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டே வந்தனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் இலங்கை அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார், விராட்கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

தொடக்க வீரர் (ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப்) : சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான். இதில் இஷான் கிஷான் இந்தியா அணியின் முக்கியமான தொடக்க வீரராக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200க்கு மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.

மிடில் ஆர்டர் : ருதுராஜ் கெய்க்வாட், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன். இதில் இளம் வீரரான ருதுராஜ் சமீப காலமாகவே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆல் – ரவுண்டர் : வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல், ஹர்டிக் பாண்டிய.

பவுலர்கள் : ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், உம்ரன் மலிக் போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here