விராட்கோலி இல்லை ; இவங்க மூவர் தான் இந்திய அணிக்கான டாப் 3 பேட்ஸ்மேன் ; முன்னாள் வீரர் உறுதி

0

ஒருவழியாக இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகள் இப்பொழுது தான் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்தியா அணி 2 – 0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது..!

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் உலக கிரிக்கெட் அணிகள் அனைவரும் உலகக்கோப்பை போட்டிக்காக தயாராகி வருகிறது. அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியும், வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

அதனால் தான் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் இந்திய அணி வெளியேறியது. அதனால் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இதனை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விரேந்தர சேவாக் கூறுகையில் ; ” இந்திய அணியில் பல வீரர்கள் பல இடங்களில் மாற்றி மாற்றி விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் பல இடங்கள் உள்ளன.”

“எனக்கு தெரிந்து வருகின்ற உலகக்கோப்பை டி-20 ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற மூவரும் தான் அதிரடியான வீரர்கள். அதேபோல, இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர்களின் மிகவும் சிறப்பான வீரர் என்றால் உம்ரன் மாலிக் தான்.”

“நிச்சியமாக உம்ரன் மாலிக், இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக வளம் வருவார் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது எப்படி பும்ரா, ஷமி போன்ற முக்கியமான வீரர்களாக இந்திய அணியில் இருக்கிறார்களோ, அதேபோல தாம் உம்ரன் மாலிக்-கும் இந்திய அணியில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளார் சேவாக்.”

என்னதான் இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் களமிறங்கினாலும், பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி ஐபிஎல் டி-20 2022யில் மும்பை இந்தியன்ஸ் அணியால் அதிக விலை கொடுத்து இஷான் கிஷானை கைப்பற்றியது மும்பை.

ஆனால் அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2022 ஐபிஎல் போட்டியில் எந்த பலனும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் இன்னும் சில போட்டிகளில் இஷான் கிஷான் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்துதான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷான் இடம்பெற வேண்டும்..!

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்,..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here