இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த இரு பவுலர்கள் இந்திய அணியில் இருக்க வேண்டும் ; முன்னாள் வீரர் பேட்டி

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரானஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டி நாளை மதியம் 3 மணியளவில் பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதனால் இரு அணிகளும் பலமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆமாம், சமீபத்தில் தான் இரு அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் முடிந்துள்ளது. அது ட்ராவில் முடிந்த காரணத்தால் நாளை தொடங்க உள்ள போட்டிக்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி என்று வந்தால் அணியை பற்றி அல்லது வீரர்களை பற்றி ஏதாவது கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம் தான். அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த இரு பவுலர்கள் நிச்சியமாக இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய அஜித் அகர்கர் கூறுகையில் ; ” கடந்த ஆண்டு இறுதியில் முகமது சிராஜ் விளையாடியது மிகவும் அருமையாக இருந்தது.”

“இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் தான் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வந்தார். அப்படி இருக்கும் நிலையில் அவர் அணியில் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஷர்டுல தாகூர் சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாகி விளையாடி வருகிறார்.”

“பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் செய்தும் அணிக்காக விளையாடி வருகிறார். ஷர்டுல் தாகூர் அணியில் இடம்பெற்றால் ஸ்விங் மற்றும் சீம் ஆகிய இரு விஷயங்களும் இருக்கும். அதுமட்டுமின்றி, பேட்டிங்-ல் புஜாரா மிகவும் அருமையாக விளையாடி வந்துள்ளார்.”

“அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் புஜாரா இந்திய அணியில் இருப்பது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுவதில் நல்ல விஷயம் தான என்று கூறியுள்ளார் அஜித் அகர்கர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here