ஐந்தாவது டெஸ்ட் போட்டி ;
ஜூலை 1ஆம் தேதி ஆரம்பித்த போட்டியில் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.


முதல் இன்னிங்ஸ் முடிவு :
முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 84.5 ஓவர் முடிவில் 416 ரன்களை அடித்தனர். பின்பு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் பார்ட்னெர்ஷிப் இல்லாமல் அமைந்தது.
அதனால் 61.3 ஓவர் முடிவில் 284 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 138 ரன்கள் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருந்தனர்.


இரண்டாவது இன்னிங்ஸ் முடிவு :
பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் இன்னிங்ஸ் போல சரியான பேட்டிங் அமையவில்லை. ஆமாம் 245 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 57 ரன்களை அடித்திருந்தார்..! ஆமாம், பின்பு 370+ ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.
தொடக்கத்தில் மூன்று வீரர் தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும், ஜோ ரூட் மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவரும் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வந்தனர். அதனால் 76.4 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 378 ரன்களை அடித்திருந்தனர்.


அதனால் 7 விக்கெட்டை வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இந்த தொடர் சீரியஸ் போட்டியில், 2 -2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்துள்ளது.
இதனை பற்றி பேசிய இந்திய கேப்டன் பும்ரா கூறுகையில் : “நான் என்னை ஆல் -ரவுண்டர் என்று சொல்லமாட்டேன். நான்கு நாட்களில் மூன்று தினங்கள் சிறப்பாக இருந்தாலும், நான்காவது நாள் சற்று எதிர்பார்த்த படி இல்லை, அது தான் டெஸ்ட் போட்டியின் அழகே..!”
“எனக்கு தெரிந்து இரண்டாவது போட்டியில், சரியாக பேட்டிங் செய்யவில்லை. அதனால் தான் எதிர் அணிக்கு சாதகமாக மாறியது. அந்த இடத்தில் தான் வெற்றிக்கான வாய்ப்பை தவறவிட்டோம். போட்டியின் வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம் தான். முதல் போட்டியில் மழை வராமல் இருந்திருந்தால் நிச்சியமாக இந்தியா அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.”


“இருப்பினும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடினார்கள். இந்த டெஸ்ட் போட்டிக்கான தொடர் சம நிலையில் முடிந்துள்ளது. இரு அணிகளும் சிறப்பாக டெஸ்ட் போட்டி விளையாடியுள்ளோம், அதனால் தான் சரியான முடிவு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, மீண்டும் ரிஷாப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.”
“ஏவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி டிராவிட் எப்பொழுதும் எங்களுக்கு சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்திய அணியை ஒரு கேப்டனாக வழிநடத்திய பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார் பும்ரா.”