ரோஹித் சர்மாவுடன் களமிறங்க போகும் புதிய துவக்க வீரர் இவர் தான் ; கே.எல்.ராகுல் இல்லை..! – சற்றுமுன் வெளியான தகவல் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் :

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மற்ற அணிகளுக்கு இடையேயான தொடர் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் நீண்ட ஆண்டுகளாவே இந்திய அணியின் துவக்க வீரர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது..!

கடந்த 10 சர்வதேச டி-20 போட்டிகளில் இந்திய அணியின் துவக்க வீரராக பலர் விளையாடியுள்ளனர். அதில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா,ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக விளையாடி வருகின்றனர்.

ஆனால் யார் உறுதியான வீரர் என்பதை இன்னும் இந்திய கிரிக்கெட் அணி முடிவு செய்துவிட்டதா ? என்றால் சந்தேகம் தான். இரு தினங்களுக்கு முன்பு இந்திய மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் தான் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடினார்கள்.

கே.எல்.ராகுல் அவரது முன்னாள் இடத்தை கைப்பற்றியதை போல மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்துள்ளார். அவ்வப்போது கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா பார்ட்னெர்ஷிப் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை. அதேநேரம் சமீப காலமாக ரிஷாப் பண்ட் மிடில் ஆர்டரில் சொதப்பலாக விளையாடி வருகிறார்.

அதனால் தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டி-20 போட்டியில் ரிஷாப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா தான் தொடக்க வீரராக விளையாடினார்கள். ஆனால் ரோஹித் சர்மா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால் ரிஷாப் பண்ட் 14 பந்தில் 27 ரன்களை அடித்துள்ளார். ஆனால் ரிஷாப் அதிரடியாக விளையாட தொடங்கினால் நிச்சியமாக இந்திய அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால் வருகின்ற டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக ரிஷாப் பண்ட் -ஐ களமிறங்க வைக்கலாமா இல்லையா ? என்ற ஆலோசனை நிலவி வருகிறது.

எந்த அணியாக இருந்தாலும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தால் எதிர் அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும். அதனால் தான் ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் -ஐ தொடக்க வீரராக களமிறங்க முடிவு செய்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்த தொடக்க வீரர்கள் விளையாடினால் சிறப்பாக இருக்கும் ? ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் அல்லது ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் ? யார் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here