தென்னாபிரிக்கா அணிக்கு டிவில்லியர்ஸ், அதேபோல இந்தியாவுக்கு இவர் ; 360 டிகிரி மன்னன் ; டெல் ஸ்டெய்ன் ஓபன் டாக் ;

0

டி-20 உலகக்கோப்பை : இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இந்திய : குறிப்பாக தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் உடனடியாக ஆஸ்திரேலியா சென்றனர். இந்த முறை இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டுமென்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதின. அதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளது இந்திய.

இந்திய அணியின் பலம் :

சமீப காலமாக இந்திய அணியின் பேட்டிங் லைன் வலுவாக மாறிக்கொண்டே வருகிறது தான் உண்மை. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டும் தான் எந்த பக்கத்தில் பவுலிங் செய்தாலும் அதனை அதிரடியாக விளையாடி வருகிறார். இந்த உலகக்கோப்பை 2022 போட்டியில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு நிச்சியமாக உதவியாக இருக்கும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது தான் உண்மை.

தென்னாபிரிக்கா அணிக்கு டிவில்லியர்ஸ், அதேபோல இந்தியாவுக்கு இவர் ; 360 டிகிரி மன்னன் ; தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் டெல் ஸ்டெய்ன் உறுதி ;

சர்வதேச போட்டிகளில் டிவில்லியர்ஸ் – ஐ விரும்பாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அனைத்து விதமான இடத்திலும் அதிரடியாக பேட்டிங் செய்ய கூடிய வீரராக டிவில்லியர்ஸ் திகழ்கிறார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 360 டிகிரி பக்கத்திலும் அதிரடியாக விளையாடி வருகிறார்.

இதனை பற்றி பேசிய தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டெல் ஸ்டெய்ன் கூறுகையில் : “எனக்கு தெரிந்து சூர்யகுமார் யாதவ் அனைத்து பக்கமும் பேட்டிங் செய்ய கூடிய வீரர், அதுவும் ஆஸ்திரேலியாவில். அங்கு பேட்டிங் சிறப்பாக இருக்கும் அதனால் ரன்களை சுலபமாக அடிக்க முடியும்.”

“360 டிகிரி வீரராக தான் சூர்யகுமார் யாதவ் திகழ்கிறார். அதுமட்டுமின்றி, அவரை பார்க்கும்போது எனக்கு டிவில்லியர்ஸ் நியாபகம் தான் வருகிறது. அதனால் இந்திய அணியின் டிவில்லியர்ஸ் அவர் (சூர்யகுமார் யாதவ்) தான். அதுமட்டுமின்றி, இந்த உலகக்கோப்பை 2022 போட்டியில் அவரது விளையாட்டை நிச்சியமாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் டெல் ஸ்டெய்ன்.”

இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here