இந்த இருவர் தான் தோனியின் இடத்தை பிடிக்க முடியும் ; முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் கருத்து.

0

கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் இளம் இந்தியா வீரர்கள் மிகப்பெரிய பங்கை அளிக்கின்றன. இப்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க இந்தியா அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் தோனியின் இடத்தை இந்த இவர்கள் தான் பிடிப்பார்கள் என்று கருத்து கூறியுள்ளார். தோனி ஒரு மிகப்பெரிய சகாப்தம் என்றே சொல்லலாம். இதுவரை தோனி தலைமையில் இந்தியா கிரிக்கெட் அணி அனைத்து சர்வதேச கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதனால் தோனிக்கு எப்போதும் அந்த பெருமை உண்டு.

கடந்த ஆண்டு 2020 செப்டம்பர் மாதத்தில் தோனி அவரது சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. அதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் மூழ்கினர். ஏனென்றால் தோனிகாக தான் பல போட்டிகளை மக்கள் பார்த்து வந்தார்கள். ஆனால் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்றும் தோனி தான் கேப்டன்.

சமீபத்தில் சபா கரீம் அளித்த பேட்டியில் ; இந்தியாவுக்கு அடுத்த தோனி , இவர்கள் தான் என்று ரிஷாப் பண்ட் மற்றும் இஷான் கிஷானை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சமீபத்தில் ரிஷாப் பண்ட் தோனி செய்யாத சாதனையை செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இஷான் கிஷான் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்தியா கிரிக்கெட் அணியில் தேர்வானார். அவரது முதல் டி-20 போட்டி இங்கிலாந்துக்கு எதிராக 23 பந்தில் 56 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா அணிக்கு இரு தோனி உள்ளார்கள் அதைவிட பெரிது வேறு ஒன்றும் இல்லை. எந்த பயமும் இல்லாமல் எந்த பதட்டம் இல்லாமல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர், இரு வீரர்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here