இவங்க இருவர் தான் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஸ்டார் ; இந்திய வீரர்களை புகழ்ந்து பேசிய நியூஸிலாந்து அணியின் வீரர் ரோஸ் டெய்லர் ;

இந்திய அணியில் இப்படியும் வீரர்கள் இருக்கிறார்களா ? நிச்சயமாக இவர்னகி இருவரும் இந்திய அணியில் மட்டுமின்றி உலக கிரிக்கெடின் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் ரோஸ் டெய்லர்.

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வவ்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் வருகின்றனர். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர் யாராக இருந்தாலும் நிச்சியமாக அவர்களுக்கு வாய்ப்பு பிசிசிஐ வழங்கி வருகிறது தான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கியமான விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன்- னாக வளம் வருகிறார் ரிஷாப் பந்த். அதுமட்டுமின்றி ஷ்ரேயாஸ் ஐயரும் அவருக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார், ஷ்ரேயாஸ்.

களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில்  ரிஷாப் பண்ட் டெல்லி கேபிட்டல்ஸ் அணியையும், ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியையும் வழிநடத்தி வருகின்றனர். சமீபத்தில் நியூஸிலாந்து அணியின் வீரரான ரோஸ் டெய்லர் கூறுகையில் :

” ரிஷாப் பண்ட் எனக்கு தெரிந்து பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார், அவர் ஒன்று இளம் வீரர் இல்லை. அதுமட்டுமின்றி, நான் முதல் முதலில் ஸ்ரேயாஸ் ஐயரை 2016 -2017ஆம் ஆண்டுகளில் பார்க்கும்போது அவரது விளையாட்டில் ஒரு நம்பிக்கை தன்மை வெளியானது.”

“அதுமட்டுமின்றி, இந்திய வீரர்கள் எப்பொழுதும் வேகப்பந்தை காட்டிலும் சுழல் பந்துகளை சுலபமாக விளையாடுவது இயல்பு தான். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அதனை சர்வதேச போட்டிகளில் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விதம் அருமையான ஒன்று.  டெஸ்ட் போட்டியில் அவரது விளையாட்டை யாராலும் கேள்வி கேட்க முடியாது.”

” இப்பொழுது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் கொல்கத்தா அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. ஷ்ரேயாஸ் ஐயர் நிச்சியமாக ப்ரெண்டன் மெக்குலம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களிடன் அதிக விஷயத்தை கற்றுக்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ளார் ரோஸ் டெய்லர்.”

“எங்கள் நியூஸிலாந்து அணியில் கெய்ல் ஜேமிசன் தான் எதிர்காலம். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் ரிஷாப் பண்ட் ஆகிய வருகின்ற 5 அல்லது 6 ஆண்டுகளில் சூப்பர்ஸ்டார் ஆக வளம் வர போகின்றனர். அதுவும் இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி உலக கிரிக்கெட் போட்டிகளில்.” ரோஸ் டெய்லர்.