எங்க அணியில் இந்த இரு பிரச்சனை உள்ளது ; அதனை முதலில் சரி செய்ய வேண்டும் ; மகேந்திர சிங் தோனி பேட்டி ;

ஐபிஎல் 2022 இன்றைய போட்டி:

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை வெற்றிகரமாக 48 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இன்றைய 49வது போட்டி மும்பையில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோத உள்ளனர்.

CSK vs RCB :

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் சென்னை அணி 9வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6வது இடத்திலும் உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 28 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர்.

அதில் சென்னை அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், பெங்களூர் அணி 10 9 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இரண்டாவது முறையாக விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சென்னை.

டாஸ் – தோனியின் பேட்டி:

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னைஅணி முதலில் பவுலிங் செய்ய போவதாக தோனி கூறினார். பின்பு ஐயை பற்றிப்பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் ; ஒவ்வொரு போட்டிகளில் டாஸ் வெல்வது ஒன்றும் முக்கியமில்லை.

எங்களுக்கு ஏதுவாக இருந்தாலும் சரிதான் (பேட்டிங் அல்லது பவுலிங்).ஆனால் போட்டியில் சிறப்பாக விளையாடுவது மிகவும் முக்கியமான ஒன்று. எங்கள் அணியில் (சென்னை) சிறந்த பார்ட்னெர்ஷிப் இருக்கிறது. அதேபோல அனைத்து போட்டிகளிலும் இருக்க ஆசைப்படுகிறோம்.

போட்டிகளில் சிறப்பான பார்ட்னெர்ஷிப் மற்றும் பவுலிங் செய்யும்போது ஒவ்வொரு ஓவரில் ரன்களை அதிகமாக கொடுத்து வருகிறோம். இந்த இரு பிரச்சனைகளை மற்றும்சரி செய்தால் போதும். அதுமட்டுமின்றி, பீல்டிங் செய்யும்போது சரியான நேரத்தில் கேட்ச் ஐ-பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மகேந்திர சிங் தோனி.

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க…! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் ?? இந்தமுறை சென்னை அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!