தோல்விக்கு நான் செய்த ஒரு விஷயம் காரணம் இல்லை ; குஜராத் கேப்டன் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022 :

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 48 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி ;

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் இல்லை. ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த வந்த நிலையில் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த நிலையில் 143 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65,சஹா 21 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 144 ரன்கள் அடித்தால் வெற்றி நின்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. தொடக்க வீரரான ஷிகர் தவான் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார்.

அதனால் 16 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 145 ரன்களை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ் அணி. புள்ளிபட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 5வது இடத்திலும் உள்ளனர்.

ஹார்டிக் பாண்டிய பேட்டி :

போட்டி முடிந்த பிறகு தோல்வியை குறித்து பேசிய ஹார்டிக் பாண்டிய கூறுகையில் ; தோல்விக்கு காரணம் டாஸ் வென்ற பிறகு பேட்டிங்-ஐ தேர்வு செய்தது தான் என்று யாரும் சொல்ல முடியாது. ஏனென்றால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பல போட்டிகளில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்து இலக்கை கைப்பற்றி போட்டிகளில் வென்றுள்ளோம்.

ஆனால் டார்கெட் வைக்க வேண்டும், அப்பொழுது தான் அணியின் உண்மையான திறன் வெளிப்படும். எங்களுக்கு நன்கு தெரியும் குறைந்தபட்ச ரன்களான 170 கூட நாங்கள் அடிக்கவில்லை. அதுமட்டுமின்றி ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததும் தான் காரணம்.

இன்னும் இரு தினங்களுக்கு பிறகு எங்களுக்கு ஒரு போட்டி உள்ளது, அதில் எப்படி வெல்ல வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போட்டியில் வெற்றி , தோல்வி என்பது சாதாரணமான ஒரு விஷயம் தான் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய..!