எங்கள் அணியில் இவர் இல்லாமல் வெற்றியை கைப்பற்றியுள்ளோம் ; இவர் இருந்தால் அவ்வளவு தான் ; ரிஷாப் பண்ட்

0

ஐபிஎல் 2022 : நேற்று நடந்த 2வது ஐபிஎல் 2022 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பரபோர்னே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பாக ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமைந்தது. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 177 ரன்களை அடித்தனர். அதில் ரோஹித் சர்மா 41, இஷான் கிஷான் 81, அன்மோல்பரீட் சிங் 8, திலக் வர்மா 22, பொல்லார்ட் 3, டிம் டேவிட் 12, டேனியல் சாம்ஸ் 7 ரன்களை அடித்துள்னனர்.

பின்பு 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. அதில் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையாமல் போனது. ஆனாலும் இறுதிவரை போராடிய டெல்லி அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 179 ரன்களை அடித்தனர்.

அதில் ப்ரிதிவி ஷாவ் 38, டிம் செய்பிரட் 21, ரிஷாப் பண்ட் 1, லலித் யாதவ் 48, ஷர்டுல் தாகூர் 22 மற்றும் அக்சர் பட்டேல் 38 ரன்களை அடித்தனர். அதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தன.

இதனை பற்றி பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் கூறுகையில் ; ” நாங்கள் விக்கெட்டை இழந்து வருகிறோம் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். முதலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் விளையாடினோம், ஆனால் நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டே இருந்தது.”

“அதனால் எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல யோசனைகளை செய்தோம். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் முக்கியமான வீரர்களான டேவிட் வார்னர், மிட்ச் மார்ஷ் போன்ற வீரர்கள் அணியில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் நிச்சியமாக இன்னும் சிறப்பாக பேட்டிங் இருந்திருக்கும்.”

“அதனால் இருக்கும் வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்பது தான் என்னுடயங் நோக்கமாக இருந்தது. இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் மிகவும் சிறப்பாகி பவுலிங் செய்துள்ளார். அவர் பயிற்சியின் போதும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here