நான் இந்திய அணியில் திரும்ப விளையாட தொடங்கிய போது ; என்னை மிடில் ஆர்டரில் விளையாட வைத்தனர் ; இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வருத்தம் ;

0

இந்திய கிரிக்கெட் போட்டிகளில் புதிய மற்றும் இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றனர். உலக கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு தனி இடம் உண்டு. ஆமாம், இதுவரை அனைத்து விதமான ஐசிசி உலககோப்பைகளையும் இந்திய அணி பெற்றுள்ளது.

சமீபத்தில் தான் கேப்டன் பற்றிய சர்ச்சை முடிந்த இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணி வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்களுக்கு அவ்வப்போது இந்திய அணியில் நடக்கும் சில முக்கியமான கருத்துக்களை பற்றி கூறுவது வழக்கம்.

அதேபோல, தான் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் கூறுகையில் ; ” இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு 15 மாதங்கள் இருக்கும். அப்பொழுது நான் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்ற பட்டேன். நான் 2 அல்லது 3 சீரியஸ் போட்டிகளில் என்னை எடுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.”

“ஆனால் அணியில் சில முக்கியமான பேச்சுவார்த்தை ஆரம்பித்தனர். அதில் என்னை மிடில் ஆர்டரில் களமிறங்க வைக்க போவதாக சொன்னார்கள். அப்பொழுது நான் சரி என்று ஒப்புக்கொண்டேன். பின்னர், எதிர்பாராத விதமாக மயங்க் அகர்வாலுக்கு காயம் ஏற்பட்டது.”

“அப்பொழுது என்னிடம் 5வதாக பேட்டிங் செய்ய சொன்னார்கள். அப்பொழுது கேப்டன், பயிற்சியாளர்கள் இடையே நகைச்சுவையான பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்பொழுதுதான் அவர்களுக்கு ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய ஆட்கள் இல்லாமல் இருந்தது, உன்னால் முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள்.”

“அதற்கு ஏதுவாக இருந்தாலும் சரி தான் என்று கூறினேன். வாய்ப்புகள் வரும்போது ஏதுவாக இருந்தாலும் செய்ய வேண்டும். ஏனென்றால் கடையில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் கொடுத்த வாய்ப்பை முடிந்த வரை விளையாட, ஒருவேளை அதில் தோல்வி பெற்றால் முடியாது என்று சொல்லலாம் என்று கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.”

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் புதிதாக அறிமுகம் ஆகியுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் கே.எல்.ராகுல்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here