இது மட்டும் இருந்தால் நிச்சியமாக எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணி வெல்லும் ; சுனில் கவாஸ்கர்….!

நேற்று நடந்து முடிந்த இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்கள் எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 37 ரன்கள், தவான் 67 ரன்கள், விராட் கோலி 7 ரன்கள், கே.எல்.ராகுல் 7 ரன்கள், ரிஷாப் பண்ட் 78 ரன்கள், ஹார்டிக் பாண்டிய 64 ரன்கள் மற்றும் குர்னல் பாண்டிய 25 ரன்கள் எடுத்துள்ளனர்.

330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஏமாற்றமே. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் 14 ரன்களிலும் மற்றும் பரிஸ்டோவ் 1 ரன்களில் ஆட்டம் இழந்ததால், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தடங்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் பேட்டிங் செய்த எந்த வீரரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அதில் பெண் ஸ்டோக்ஸ் 35 ரன்கள், மலன் 50 ரன்கள், ஜோஸ் பட்லர் 15 ரன்கள், மெயின் அலி 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இங்கிலாந்து அணி சுருண்டுவிட்டது என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய அணிக்கு எதிரியாக மாறினார் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண். இறுதிவரை போராடிய சாம் கரண் ஆட்டம் இழக்காமல் 95 ரன்களை எடுத்துள்ளார். சாம் காரனுக்கு நல்ல பார்ட்னெர்ஷிப் கிடைத்து இருந்தால் நிச்சியமாக இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என்று இங்கிலாந்து அணி கேப்டன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடந்த டெஸ்ட் போட்டிகள், டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. அனைத்து விதமான போட்டியிலும் வென்ற இந்திய அணி 3 போட்டிக்கான தொடரை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

Also Read : நடராஜனின் இறுதி ஓவர்…? இந்திய அணி வெற்றிக்கு நடராஜன் தான் காரணமா ?? ; முழு விவரம்…!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகச்சிறந்த அணி இருக்கிறது. அவர் அதனை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு நல்ல தொடக்க வீர்ரகளும் உள்ளார்கள், மிடில் பேட்டிங் செய்யும் வீரர்களும் உள்ளார்கள் அதுமட்டுமின்றி சிறப்பான பந்து வீச்சாளர்களும் இருக்கின்றார்கள். விராட் கோலி சரியான முறையில் பயன்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சமமான அணி என்று கூட சொல்லலாம். இப்படி ஒரு அணி இருக்கும் பட்சத்தில் , அதிக போட்டிகளில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. எல்லாராலும் ஒரே போட்டியில் விளையாட முடியாது. ஆனால் ஏதாவது இரு பேட்ஸ்மேன் மற்றும் இரு பவுலர்கள் போட்டிகளை மற்றும் திறன் அதிகம் இருக்கும், அது இந்தியாவுடன் இருப்பது போல் நன் உணர்கிறேன் என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.