சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்க இது மட்டும் தான் காரணம் ; ரோஹித் சர்மா பேட்டி ;

நேற்று கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. ருதுராஜ் கெய்க்வாட்-க்கு 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் இஷான் கிஷான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 184 ரன்களை அடித்தது இந்திய அணி. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 4, இஷான் கிஷான் 34, ஷ்ரேயாஸ் ஐயர் 25, ரோஹித் சர்மா 7, சூர்யகுமார் யாதவ் 65, வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஆனால் தோல்வியே மிஞ்சியது. இறுதி வரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 167 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. அதிலும் அதிகபட்சமாக பூரான் 61, போவெல் 25, ஷெப்பர்ட் 29 ரன்களை அடித்துள்ளனர். அதனால் 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; நாங்களும் முதலில் பவுலிங் செய்ய தான் நினைத்தோம்.ஏனென்றால் இந்திய அணி மிடில் ஆர்டர் மிகப்பெரிய அளவில் இல்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டியில் வென்றது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.

இந்த முறை பல இளம் வீரர்கள் உள்ளனர். இந்த முறை பல முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.இந்த முறை ஹர்ஷல் புதிய வீரர், அவேஷ் கான் அவரது முதல் போட்டியில் விளையாடி வந்துள்ளார். ஷர்டுல் அவ்வப்போது உள்ளே வெளியே உள்ளார். அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை.

ஏனென்றால் தொடர்ந்து விளையாடினால் வீரர்களுக்கு சோர்வு ஏற்படும். அதனால் அவ்வப்போது ஓய்வு கொடுப்பதே ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் விளையாட வேண்டும், அதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.