எனக்கு வேற வழி தெரியவில்லை..! அதனால் தான் இவரை அணியில் இருந்து வெளியேற்றினோம் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

போட்டி 2: துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பையில் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.

அதில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் அணி 8 முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளனர். அதனை அடுத்து இன்றைய போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும், பின்னர் போக போக பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட தொடங்கினார்கள். இருப்பினும் தொடர்ந்து விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர் முடிவில் 147 ரன்களை அடித்தனர்.

அதில் ரிஸ்வான் 43, நசீம் 0, டஹானி 16,ஹரிஸ் ரவூப் 13, ஷதாப் கான் 10, அஹமத் 28, பாபர் அசாம் 10 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் ரிஷாப் பண்ட் இல்லாதது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

போட்டி தொடங்கும் முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ; “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு போட்டியின் வெற்றியை டாஸ் நிச்சியமாக முடிவு செய்யாது. ஏனென்றால் நாங்க இங்க கிரிக்கெட் போட்டியில் விளையாட தான் வந்துருக்கோம். இதே மைதானத்தில் நாங்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளோம்.”

“அதனால் பிட்ச் எப்படி இருக்குமென்று நன்கு தெரியும். அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுகிறது. அதனால் ரிஷாப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இரு வீரர்களில் ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவானது. இது மிகவும் கடினமான விஷயம் தான்.

ஆனால் வேறு வழியில்லாமல் தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தோம். அதனால் ஆவேஷ் கானை முன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இணைத்துள்ளோம். இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகும். இருப்பினும் எதிர் யார் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. நாங்க என்ன தவறு செய்கிறோமோ, அதனை சரி செய்து விளையாட வேண்டுமென்று தான் யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

இதில் ஆவேஷ் கான் இரண்டு ஓவர் பவுலிங் செய்து 19 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டும் கைப்பற்றியுள்ளார். இதில் கிட்டத்தட்ட ஓவருக்கு 9.50 ரன்கள் என்ற கணக்கில் கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் அணியில் இல்லாதது சரியான முடிவா ? யாருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here