ஐபிஎல் 2021 யின் கோப்பையை வெல்ல போகிறது இந்த அணிதான் உறுதியாக சொல்லும் ; சேவாக் ; முழு விவரம் ;

ஐபிஎல் 2021; கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அன்று ஆரம்பித்தது. ஆனால் கொரோனா தோற்று சில வீரர்களுக்கு இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் வந்தவர்களுக்கு மட்டும் அவரவர் வீட்டுக்கு வழி அனுப்பிவைத்தது பிசிசிஐ.

மீதமுள்ள 31 போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற உள்ளது. இன்று முதல் போட்டியில் (மேட்ச் ; 30) மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை இந்த இரு அணிகளும் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 19 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 போட்டியில் இந்திய அணியும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும்.

ஐபிஎல் போட்டிகள் அரம்பித்தாலே…!! எந்த அணிகள் வெல்லும், எந்த வீரர் அதிக ரன்களை அடிப்பார் என்று பல கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்வது வழக்கம். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இந்த அணிதான் ஐபிஎல் 2021 கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2021 கோப்பையை பற்றி பேசிய சேவாக் ; எனக்கு தெரிஞ்சு டெல்லி அல்லது மும்பை தான் கோப்பையை வெல்லும். அதிலும் மும்பை அணிக்கு தான் அதிக வாய்ப்புள்ளது. இதுவரை ஐந்து கோப்பையை வென்றுள்ளது, அதேபோல இந்தமுறை மும்பை தான் என்று கூறியுள்ளார் சேவாக்.

ஏனென்றால் ஐக்கிய அரபு மைதானத்தில் விளையாடினால் ரன்கள் மெதுவாக தான் அடிக்க முடியும். அதனால் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய இரு அணிகளுக்கும் நிச்சியமாக சில சிக்கல் ஏற்படும். முதல் பாதியில் சிஎஸ்கே அணி 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது. ஆனால் ஐக்கிய அரபு நாட்டில் அந்த அளவுக்கு இருக்காது என்று கூறியுள்ளார் சேவாக்.

ஆனால் அந்த பிரச்சனை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிச்சியமாக இருக்காது ; சேவாக் . இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் 2 வது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றியை கைப்பற்ற போகும் அணி எது ?