இவர் இப்படியெல்லாம் விளையாடினால் ஒன்றும் செய்ய முடியாது ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், சன்டனர் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டி ரஞ்சியில் உள்ள JSCA சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு சிறப்பாக தொடக்க ஆட்டம் அமைந்தது. அதிலும் டேவன் கான்வே அடித்த அரைசதம் நியூஸிலாந்து அணிக்கு ஆறுதலாக அமைந்தது.

பின்பு மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய மிச்சேல் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 59* ரன்களை விளாசினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நியூஸிலாந்து அணி 176 ரன்களை அடித்தனர்.

பின்பு 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி தான். ஆமாம், தொடக்க வீரர்களான இஷான் கிஷான், சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தனர்.

அதனால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டிய மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் முடிந்தவரை ரன்களை அடித்தனர். ஆனால் இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

அதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வென்றது நியூஸிலாந்து அணி. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரில் முன்னிலையில் இருக்கின்றனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்தியா அணியின் கேப்டனான ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : ” உண்மையிலும் நாங்க மட்டுமில்லை, எதிர் அணியும் இப்படி எல்லாம் விக்கெட் போகும் என்று நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் (நியூஸிலாந்து) சிறப்பாக விளையாடியதால் தான் வெற்றி அவர்களுக்கு கிடைத்துள்ளது. சூரியகுமார் யாதவ் மற்றும் நானும் (ஹர்டிக்) பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் வெற்றியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்தோம்.”

“உண்மையிலும் பவுலிங் தான் மோசமாக அமைந்தது. கிட்டத்தட்ட 20 முதல் 25 ரன்கள் வரை கொடுத்துவிட்டோம். பரவாயில்லை, இது இளம் வீரர்களை கொண்ட அணி தான். இந்த தவறில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் இன்றைய போட்டியில் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் போன்ற விஷயங்களில் பட்டைய கிளப்பிவிட்டார்.”

“இது போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால் தான் நம்பிக்கையுடன் விளையாடி கொண்டு இருக்க முடியும் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here