இவங்க கொஞ்சம் சரியாக விளையாடிருந்தால் வெற்றி நிச்சியமாக கிடைத்திருக்கும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டம் ஓரளவிற்கு அமைந்தது. ..!

இருப்பினும் ஒருவர் பின் ஒருவராக சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். அதனால் 49வரை விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது 246 ரன்களை அடித்தனர். அதில் ஜேசன் ராய் 23, பரிஸ்டோவ் 38, ஜோ ரூட் 11, பென் ஸ்டோக்ஸ் 21, ஜோஸ் பட்லர் 4, லிவிங்ஸ்டோன் 33, மொயின் அலி 47, வில்லே 41 ரன்களை அடித்தனர்.

பின்பு 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா அணி. சுலபமாக ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றிவிடுமே என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவில் தோல்வியை சந்தித்தது இந்திய. தொடக்க வீரரான ரோஹித் சர்மா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும், ஷிகர் தவான், விராட்கோலி, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர்.

அது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி போன்ற வீரர்கள் முடிந்தவரை ரன்களை அடித்தனர். ஆனால் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை மட்டும் இழந்து கொண்டே வந்தது இந்திய.

அதனால் 38.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 146 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய. அதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. போட்டி முடிந்த பிறகு தோல்வியை பற்றி பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் ; “நாங்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்தோம். ஆனால் அவர்களுக்கு மிடில் ஆர்டரில் சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைந்துவிட்டது, மொயின் அலி மற்றும் விலே போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதற்கு இந்த இலக்கை அடிக்க முடியாது என்பது இல்லை. நாங்க சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பது தான் உண்மை.”

“எப்பொழுதும் நாங்கள் பேசுவது போல முக்கியமான நேரங்களில் கிடைக்கும் கேட்ச்- ஐ சரியாக பிடிக்க வேண்டும். பேட்டிங் இல்லையென்றாலும் பவுலிங் சிறப்பாக இருந்தது. என்னுடைய விக்கெட்டை அவர்கள் கைப்பற்றியது எனக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. இந்த மாதிரி ஒரு அணியுடன் விளையாடும் போது, நம் அணி ஐந்து பவுலர் மற்றும் ஆல் – ரவுண்டர்களை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.”

“அதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒரு வீரர் சிறப்பாக விளையாடிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிகளை செய்வோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”