இந்த ஆண்டு ஐபிஎல் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் முதலில் தொடங்கும் சில போட்டிகளில் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான். நாடு முழுவதும் பரவி இருப்பதால், மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்று இந்தியா அரசு முடிவு செய்துள்ளது. அதனால் மைதானத்தில் மக்கள் அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் பிசிசிஐ.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பித்துள்ளனர். மக்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் பிரைவேட் மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும்பணி நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக செய்தால் மட்டும் தான் இந்த வைரஸ் தாக்கம் முற்றிலுமாக குறையும் என்று அரசாங்கம் குறி வருகிறது.
வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஐபிஎல் அணியின் ஓனர் கூறியுள்ளார் ; முழு விவரம்..
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முதலாளி வினோத் ஐபிஎல் வீரர்களுக்கு தடுப்பூசி போடா வேண்டும் என்று பிசிசிஐ க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை நாங்கள் அரசாங்கத்திடம் இதனை பற்றி பேசுகிறோம் என்று கூறியுள்ளனர். ஏனென்றால் இந்தியாவில் 6 மைதாங்களில் மட்டுமே இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் நடைபெற உள்ளது.
வீரர்கள் அனைவரும் மைதானம் மாறி மாறி பயணம் செய்வேண்டி இருக்கிறது. அதனால் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும்பதில் சந்தேகம் வருகிறது. அது மட்டுமின்றி நாட்டின் விளையாட்டு வீரர்கள் அனைவரும் முக்கியம். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டியின் போது விளையாடாத அனைவரும் ஒரே இடத்தில இருக்க வேண்டி இருக்கிறது.
அதனால் கொரோனா பரவல் இருக்கலாம். ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொஞ்சம் ஆவது நிம்மதியாக இருக்கும் என்று கூறியுள்ளார் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் சி.இ.ஓ.வினோத் கூறியுள்ளார். இதனை செயல்படுத்தும் பிசிசிஐ என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.