கடந்த மாதம் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அதில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா கிரிக்கெட் வீரர்கள். அதிலும் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்களின் பலர் மனதை கவர்ந்துள்ளார்.
அதன்பின்னர் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் , டி-20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதுவும் இந்தியாவில். டெஸ்ட் போட்டியில் 4 க்கு 3 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியது இந்தியா அணி.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதனால் அடுத்த டி-20 போட்டியில் வெற்றி பெறுமா ?? என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இரு இந்தியா வீரர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை ; ப்ராட் ஹாக்ராகுல் திவாதிய மற்றும் வருண் சக்ரவத்தி ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிட்னஸ் டெஸ்டில் பாஸ் ஆகவில்லை அதனால் இருவரும் அணியில் விளையாட முடியாமல் போய்விட்டது.
அதுவும் வருண் சக்ரவதிக்கு ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பும் கிடைத்தது ஆனால் அவருடைய தோல்பட்டையில் அடிப்பட்டதால் விளையாட முடியாமல் போய்விட்டது.
இதனை விமர்சித்த முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வீரர் பிராட் ஹாக் : வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்த வேண்டும். ஆனால் இவர்கள் இருவரும் அப்படி செய்யவில்லை. இவர்களுடைய கடைசி வாய்ப்பை தவரவிட்டார்கள். இந்தியா கிரிக்கெட் அணிக்கு தேவை ஆன அளவுக்கு இளம் வீரர்கள் உள்ளனர். இந்த இவருக்கும் அர்ப்பணிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.