இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மற்றும் 4.3 ஓவர் மீதமுள்ள நிலையில் வென்றது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. முதல் டி-20 ஆட்டத்தில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இரண்டாவது டி-20 போட்டியில் என்ன செய்ய போகிறது என்று பல கேள்விகள் இருந்தன.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அகமதாபாத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இராணுவது டி-20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஜேசன் ராய் 35 பந்துகளில் 46 ரங்களிலும் , ஜோஸ் பட்லர் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது.
அதன் பின்னர் களம் இறங்கிய மாலன் 23 பந்திகளில் 24 ரன்களையும் பரிஸ்டோவ் 20 ரன்களிலும் , மோர்கன் 28 ரன்களிலும் , பென் ஸ்டோக்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்து 164 ரன்களை எடுத்துள்ளது.
165 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய இந்தியா அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் ஒரு ர் ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய இஷான் கிஷன் சிறப்பான அரை சதம் அடித்துள்ளார். 32 பந்துகளில் 56 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் ஓய்ந்தனர் களம் இறங்கிய இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தால் விக்கெட்டை இழக்காமல் 49 பந்துகளில் 73 ரன்களை எடுத்து 17.5 ஓவரில் இந்தியா இங்கிலாந்து அணியை வென்றது. இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் 73 ரன்களை எடுத்துள்ளார். இதனால் ஒரு பெருமையை வாங்கியுள்ளார் அது என்னவென்றால்? விராட் கோழி முதல் சர்வதேச டி-20 போட்டிகளில் விராட் கோலி தான் முதல் வீரர் 3000+ ரன்களை தாண்டிய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஒரு ரன்களை கூட அடிக்க முடியாமல் அவுட் ஆகிவிட்டதால் இந்த சாதனையை அப்பொழுது பெற முடியவில்லை.