ஆசிய கோப்பையில் விராட்கோலி இல்லையா ? அதிர்ச்சியில் இருக்கும் இந்திய ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை நாளை முதல் (ஆகஸ்ட் 27ஆம்) தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஆசிய கோப்பையில் ; இந்திய, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் காங் ஹாங் போன்ற ஆறு அணிகள் தேர்வாகியுள்ளது. கடந்த 8ஆம் தேதி தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார், தீபக் ஹூடா, ஆவேஷ் கான், அர்ஷதீப் சிங், புவனேஸ்வர் குமார், ரவி பிஷானி, யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டிய, தினேஷ் கார்த்திக், ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் விராட்கோலியின் கம்பேக் எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆமாம், கடந்த இரு ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் தவித்து வருகிறார் விராட்கோலி.சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை.

அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாபே போன்ற அணிகளுக்கு எதிரான தொடரிலும் விராட்கோலி பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சரியாக விளையாடாமல் தவித்து வரும் விராட்கோலி முடிந்தவரை போட்டிகளில் விளையாடினால் தான் சிறந்த கம்பேக் கொடுக்க முடியும் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்பொழுது இலங்கை கிரிக்கெட் வர்ணனையாளர் பேசிய விஷயம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. ஆமாம், அவரது ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலிக்கு கையில் அடிபட்ட காரணத்தால் அவர் ஆசிய கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அந்த இடத்திற்கு சுப்மன் கில் இடம்பெறுவார் என்று பதிவு செய்திருந்தார்.

இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியானது. ஆனால் இதனை பற்றி பிசிசிஐ எந்த விதமான செய்தியையும் அறிவிக்கவில்லை. பிறகு என்னை மன்னித்துவிடுங்கள், நான் விராட்கோலி பற்றி சொன்னது தவறான செய்தி, அந்த பதிவை டெலிட் செய்துவிட்டேன் என்று பதிவு செய்திருந்தார் ரோஷன் அபேயசிங்யே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here