இந்திய அணியில் இவர் தான் என்னுடைய Inspiration ; பயங்கரமாக பயிற்சி செய்வார் ; ரஷீத் கான் ஓபன் டாக் ;

0

AsiaCup 2022: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த ஆசிய கோப்பைக்கான தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி , நாளை இரவு முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணியின் கம்பேக் :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை டி-20 போட்டிகளில் இந்திய அணி லீக் போட்டிகளில் இருந்து மோசமான நிலையில் வெளியேறியது. அதனால் இந்த முறை எப்படியாவது உலகக்கோப்பையை வெல்ல அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

ஆமாம், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரோஹித் சர்மா கேப்டன் பதவி ஏற்றார். அதில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த 2018ஆம் நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் கோப்பையை வென்றுள்ளது.

அதனை தக்க வைத்துக்கொள்ளுமா இந்திய ?

விராட்கோலியின் பார்ம் :

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் மிடில் பேட்ஸ்மேனான விராட்கோலி பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை. 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் சதம் அடித்த பிறகு மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் விராட்கோலி.

அதுமட்டுமின்றி கடந்த சில போட்டிகளில் 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் ஆட்டம் இழந்து வருகிறார் விராட்கோலி. அதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்காமல் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார் விராட்கோலி.

சிறிது இடைவெளிக்கு பிறகு ஆசிய கோப்பையில் விளையாட போகிறார் விராட்கோலி. அதில் ஆவது கம்பேக் கொடுப்பாரா விராட்கோலி ??. என்னதான் இருந்தாலும் இந்திய அணியின் அசைக்க முடியாத வீரர்களில் ஒருவர் தான் விராட்கோலி. இதுவரை மொத்தம் 70 சதம் அடித்துள்ளார். விராட்கோலியை முன்னோடியாக பல வீரர்கள் நினைத்துக்கொண்டு வருகின்றனர்.

இதேபோல தான் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் சமீபத்தில் விராட்கோலியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ” நான் எப்பொழுதும் ஐபிஎல் போட்டிகளில் பயிற்சி செய்யும்போது விராட்கோலியை கவனிப்பேன். அப்பொழுது அவர் குறைந்தது 2 அல்லது 2 :30 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்வார்.”

“அதிலும் நாங்க பேட்டிங் செய்துவிட்டு ஓய்வு எடுக்க செல்லும்போதும் கூட அவர் (விராட்கோலி) நெட் பயிற்சி செய்துகொண்டு இருப்பார். உண்மையிலும் அனைத்து வீரர்களுக்கும் அவர் தான் இன்ஸ்பிரேஷன் என்று புகழ்ந்து பேசியுள்ளார் ரஷீத் கான்.” வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாட உள்ளனர்.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here