விராட்கோலி-க்கு இந்த விஷயத்தில் Ego உள்ளது ; அதனால் தான் இப்படி செய்துவிட்டார் ; கபில் தேவ் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிகள் இப்பொழுது தான் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் தென்னாபிரிக்கா அணி இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா.

அதன்பின்னர், இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனான விராட்கோலி, நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே கூறிவிட்டார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் சமீபத்தில் தான் விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பற்றி பேசியுள்ளார் . விராட்கோலி பற்றி கூறுகையில் ; விராட்கோலி எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். சமீபத்தில் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு தொடர்ந்து அவருக்கு சர்ச்சை மட்டுமே தான் எழுந்து வந்துள்ளது.

டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட்கோலிக்கு பல வகையில் அழுத்தம் ஏற்பட்டது. அதனால் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியும். விராட்கோலி ஒரு நல்ல மனிதர், அதனால் நிச்சியமாக இந்த முடிவை ( டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகல்) எடுக்க பல யோசனை செய்திருப்பார்.

ஒருவேளை அவருக்கு கேப்டன் பதவி பிடிக்கவில்லையோ ? இருந்தாலும் நாம் அவரை ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி முக்கியமான ஒரு விஷயத்தை பகிர வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். அதில் என்னுடைய கேப்டன் பதவிக்கு கீழ் கவாஸ்கர் விளையாடியுள்ளார். அதேபோல, நான் ஸ்ரீகாந்த் மற்றும் ஆஷாருத்தின் போன்ற இரு வீரருக்கு கீழ் நான் விளையாடி உள்ளேன்.

அதில் எனக்கு எந்த EGO இல்லை. ஆனால் விராட்கோலி அந்த EGO வை விட வேண்டும். அதுமட்டுமின்றி இளம் வீரர்களுக்கு கீழ் விளையாடுவதால் EGO இருக்க கூடாது. அதனால் இனிவரும் புதிய கேப்டனை விராட்கோலி ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் கூறியுள்ளார்.