Video ; ஒன்னும் தேவையில்லை ; நீ பேட்டிங் செய் என்று சைகை காட்டிய விராட்கோலி ; வைரலாகும் விராட்கோலியின் செயல் ;

கவுகாத்தி : இன்று இரவு 7 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் பவும தலைமையிலான தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியும் இரண்டாவது டி-20 போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய.

இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் பவும பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் லைன் இருந்தது. அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரன்களை சரமாரியாக அடித்து குவித்தனர்.

அதனால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 237 ரன்களை விளாசியது இந்திய அணி. அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 57, ரோஹித் சர்மா 43, விராட்கோலி 49*, சூர்யகுமார் யாதவ் 61, தினேஷ் கார்த்திக் 17 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுதெல்லாம் இந்திய அணியின் பேட்டிங் சிறந்த முறையில் மாறிக்கொண்டு வருகிறது தான் உண்மை.

அதுமட்டுமின்றி கடந்த இரு ஆண்டுகளாகவே சரியாக பேட்டிங் செய்ய முடியாமல் தவித்து கொண்டு இருந்த விராட்கோலி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து அதிரடியாக விளையாட தொடங்கிவிட்டார். அதனால் இந்திய அணிக்கு பாசிட்டிவ் தான் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில் விராட்கோலி செய்த விஷயம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி என்ன செய்தார் விராட்கோலி ? இறுதி நேரத்தில் விராட்கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து கொண்டு வந்தனர். சரியாக இறுதி ஓவரில் இரு பந்துகள் மீதமுள்ள நிலையில் விராட்கோலி 49* என்ற நிலையி இருந்தார்.

அப்பொழுது நான் ஒரு ரன் ஓடிவருகிறேன். நீங்க பேட்டிங் செய்து அரைசதம் அடித்துக்கோங்க என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக். ஆனால் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று விராட்கோலியின் முகபாவனை செய்த விஷயம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

இப்பொழுது தென்னாபிரிக்கா அணி 238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த 13 ஓவர் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 110 ரன்களை அடித்துள்ளனர். இப்பொழுது டேவிட் மில்லர் மற்றும் டி-காக்போன்ற வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இன்னும் 42 பந்தில் 128 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர். இரண்டாவது போட்டியில் வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ?