முதல் ஒருநாள் போட்டியில் இவர் விளையாடுவது சிரமம் ; வலுவாக போட்டியிடுமா இந்திய ? மாற்று வீரர் யாராக இருக்கும் ?

இந்திய கிரிக்கெட் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். மொத்தம் மூன்று போட்டிகளில் விளையாட, சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டி இன்று மாலை 5:30 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி இதோ :

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், விராட்கோலி அல்லது ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி, பிரஷித் கிருஷ்ணா, ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால்.

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் விராட்கோலி கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக எந்த போட்டியிலும் விளையாடுவது இல்லை. 2019ஆம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்துள்ளார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாக இன்னும் ஒரு முறை கூட சதம் அடிக்காதது கேள்வியாக மாறியுள்ளது.

பலர் விராட்கோலி ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றி ஓய்வு கொடுத்த பிறகு இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையில் விராட்கோலி-க்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ள காரணத்தால் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

போரம்-ல் இல்லாத விராட்கோலி இப்படி போட்டியில் விளையாடாமல் இருந்தால் எப்படி சரியாக இருக்கும் ? அவருக்கு பதிலாக இந்தியா அணியில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனை பற்றி பேசிய பிசிசிஐ உறுப்பினர் ;

“கடந்த டி-20 இறுதி போட்டியில் விராட்கோலியின் இடுப்பில் பலமாக காயம் ஏற்பட்டது. அவர் பேட்டிங் செய்த போது காயம் ஏற்பட்டதா பீல்டிங் செய்யும்போது ஏற்பட்டதா என்று சரியாக சொல்ல முடியாது. அதனால் முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி விளையாட போவதில்லை” என்று கூறியுள்ளனர்.

விராட்கோலி அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!