பெங்களூர் அணியில் நிச்சியமாக தமிழக வீரர் தான் முக்கியமான வீரராக இருப்பர் ; இர்பான் பதான் அதிரடி கருது…; யார் அது தெரியுமா..?

வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் 2021 ஆரம்பிக்க உள்ள நிலையில், ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் மிகுந்த சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகம்.

ஏனெட்னரால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. அனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் நடக்கும் என்றும் முதல் சில போட்டிகளில் மக்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், ஐபிஎல் போட்டியை பற்றியும் அணிகளின் தனித்திறமை பற்றியும் விமர்சித்து கொண்டு இருக்கின்றனர். இப்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பெங்களூர் அணியின் கீ பிளேயர் என்று கூறியுள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், வாஷிங்டன் சுந்தர் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கியமான கீ பிளேயர் என்று கூறியுள்ளார். ஏனென்றால் அவரால் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடவும் முடியும், அதுமட்டுமின்றி மிடில் ஓவரில் அசத்தலான பவுலிங் திறனும் அவரிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார் இர்பான் பதான்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள், டி-20 போட்டிகள், ஒருநாள் போட்டியிலும் மற்றும் இங்கிலாந்துகிய எதிரான அணைத்து விதமான தொடர்களிலும் அவரவர் தனி திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதனால் நிச்சியமாக அவர்தான் கீ பிளேயர் ஆக இருக்கும் முடியும் என்று சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் 14 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 9 போட்டிகளில் பெங்களூர் அணிக்காக பேட்டிங் செய்து 111 ரன்களை எடுத்துள்ளார். அதில் அதிபட்சமாக 30 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.