இனிமேல் இவங்க இருவருக்கும் டி-20 போட்டியில் வாய்ப்பு கிடையாது ; ராகுல் டிராவிட் திட்டவட்டம் ; ரசிகர்கள் அதிர்ச்சி ;

இந்திய : இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

டி-20 போட்டிக்கான தொடர் :

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான இருந்தது. அதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியது இந்திய. கிரிக்கெட் தவரிசை பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியால் கடந்த பல ஆண்டுகளாவே ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை.

அதனால் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2024-ஐ மனதில் வைத்து கொண்டு பிசிசிஐ முக்கியமான முடிவுகளை கையிலோ எடுத்து வருகின்றனர்.

இந்திய அணியில் நடக்க போகும் மாற்றம் :

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தி இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதனால் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பெற்றால் நிச்சியமாக டி-20 உலகக்கோப்பை 2022ல் வென்று விடும் என்று அனைவரும் நினைத்து கொண்டு இருந்தனர்.

ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதனால் இனிவரும் டி-20 சர்வதேச போட்டிகளில் ஹர்டிக் பாண்டியவை தான் கேப்டனாக நியமிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி மூத்த வீரர்களை காட்டிலும் இனிவரும் போட்டிகளில் டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு விராட்கோலி, ரோஹித் சர்மாவிற்கு டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கும் ? ராகுல் டிராவிட் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில் ” கடந்த உலகக்கோப்பை போட்டியில் இருந்து இப்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணியில் 5 பேர் மட்டுமே ப்ளேயிங் 11 சிறப்பாக விளையாடி வருகின்றனர். நாம் டி-20 போட்டிக்கான அணியில் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாட வேண்டும். இதனை தாண்டி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிருக்கிறது. அதனால் தான் முன்னணி வீரர்கள் அனைவரும் அதில் தீவிரமான ஆலோசனையில் இருக்கின்றனர்.”

“அதனால் இன்னும் சில டி-20 சர்வதேச போட்டிகளில் புதிய வீரர்களை வைத்து டெஸ்ட் செய்து கொள்ள போகிறோம்.” என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

பின்னர் நேற்று நடந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 லீக் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தொடரை பற்றி அவரது கருத்தை பதிவு செய்துள்ளார் ராகுல் டிராவிட். அதில் “யாரும் வேணுமென்று நோ பால் போடுவது இல்லை. ஆனால் டி-20 போட்டிகளில் நோ-பால் போடுவது சரியான ஒன்று கிடையாது. இந்த மாதிரியான வீரர்களிடன் பொறுமையாக தான் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர், குறிப்பாக பவுலிங்-ல். நாங்கள் முடிந்தவரை அனைத்து விதமான ஆதவரையும் கொடுத்து கொண்டு தான் வருகிறோம். அவர்கள் அனைவரும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறார்கள். அதுவும் சர்வதேச போட்டிகளில் இருந்து கற்றுக்கொள்ள சில காலங்கள் எடுக்கும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா ? அல்லது அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டுமா ?உங்கள் கருத்து என்ன ?