இவருடைய பேட்டிங்-ஐ பற்றி தவறாக பேசவே முடியாது ; ரிஷப பண்ட் பேட்டி ;

0

போட்டி 64:

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

போட்டியின் விவரம் :

முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமையவில்லை.இருப்பினும் மிச்சேல் மார்ஷ் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 159 ரன்களை அடித்துள்ளது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

அதில் வார்னர் 0, சர்ப்பராஸ் கான் 32, மிச்சேல் மார்ஷ் 63, லலித் யாதவ் 24, ரிஷாப் பண்ட் 7, பவல் 2, அக்சர் பட்டேல் 17, ஷர்டுல் தாகூர் 3, குல்தீப் யாதவ் 2 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. ஏனென்றால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் திணறிக்கொண்டு வந்தது. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 142 ரன்களை மட்டுமே அடித்தது. அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி அணி.

அதில் அதிகபட்சமாக பரிஸ்டோவ் 28, ஷிகர் தவான் 19, ராஜபக்ச 4, ஜீடேஷ் சர்மா 44, ஹார்ப்ரீட் 1, ராகுல் சஹார் 25 ரன்களை அடித்துள்ளனர்.

ரிஷாப் பண்ட் பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் கூறுகையில் ; “இதுவரை நடந்த போட்டிகளில் நாங்கள் ஒரு போட்டியில் வெற்றியையும், ஒரு போட்டியில் தோல்வியையும் பெற்று வருகிறோம். அதுதான் ஒரு அணியாக அதனை மற்ற வேண்டும்.”

“பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் லிவிங்ஸ்டன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். எங்கள் அணியின் தொடக்க வீரரான வார்னர் 0 ரன்களில் ஆட்டம் இழந்த காரணத்தால் அவர்மேல் குறை சொல்லவே முடியாது. ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இதுவரை சிறப்பாக தான் விளையாடி வந்துள்ளார்.”

“இதுவரை நடந்த போட்டிகளில் சுழல் பந்து வீச்சாளர்கள் அவரது ஆதிக்கத்தை காட்டி வருகின்றனர். இது டெல்லி அணிக்கு மட்டுமின்றி மற்ற அணிகளுக்கும் இதேதான் என்று கூறியுள்ளார் ரிஷாப் பண்ட். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வருகின்ற 21ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.

அதில் நிச்சியமாக டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தே ஆக வேண்டும் என்பது தான் உண்மை. அப்பொழுது தான் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here