இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.
இரண்டாவது போட்டியின் சுருக்கம் :
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்களை அடித்தனர். பின்பு பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 262 ரன்களை மட்டுமே அடித்தனர்.
பின்பு இரண்டாவது இன்னிங்ஸ்-ல் குறைவான ரன்களை ஆஸ்திரேலியா அணி அடித்தனர். 31.1 ஓவர் முடிவில் 113 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சாதகமாக மாறியது. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
மோசமான நிலையில் விளையாடி வரும் தொடக்க வீரர் :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் சமீப காலமாகவே பெரிய அளவில் ரன்களை அடிப்பதில்லை. தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தாமல் மோசமான நிலையில் விளையாடி வருகிறார்.
அதுமட்டுமின்றி, துணை கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதனால் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை வெளியேற்றியுள்ளனர். ஒருவேளை கே.எல்.ராகுல் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டாரா ? என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அல்லது துணை கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் தவறாக எதுவும் நடக்கவில்லை. இதனை நான் இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த போதும் சொன்னேன்.”
“நிச்சியமாக எந்த வீரராக இருந்தாலும் இது போன்ற கடுமையான நேரத்தை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதுவும் ஒரு திறமையான வீரருடைய சாதனையை நிரூபிக்க சில கால தாமதம் ஆகும். துணை கேப்டனாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இதனால் ஒரு மாற்றமும் நடக்க போவதில்லை.”
“அவர் (கே.எல்.ராகுல் ஒரு அனுபவம் வாய்ந்த சீனியர் ப்ளேயர் தான். ஆனால் அது இந்திய அணியை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”
“கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் விளையாடி கொண்டு தான் வருகின்றனர். இருப்பினும் அணியில் உள்ள 18 வீரர்களும் தான் பயிற்சி செய்து வருகிறோம். அதனால் இன்னும் ப்ளேயிங் 11 முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் ரோஹித்.”