இவர் இப்படி பண்ணுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்களா..! சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் அதிரடி பேட்டி…!

ஐபிஎல் 2021, தொடரின் 27வது போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதுவரை  அணிகளும் 30 நேருக்கு நேர் போட்டியில் விளையாடியுள்ளனர்.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 18 போட்டியிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 218 ரன்களை விளாசியுள்ளனர். அதில் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்கள், டுப்ளஸிஸ் 50 ரன்கள், மொயின் அலி 58 ரன்கள், சுரேஷ் ரெய்னா 2 ரன்கள், அம்பதி ராயுடு 72 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதனால் புள்ளிபட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இடத்திலும் உள்ளது.

போட்டி முடிந்த பிறகு, தோல்வியை குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அளித்த பேட்டியில்; எங்கள் அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நாங்கள் சாத்தியமா எதிர்பார்க்கவில்லை.பொல்லார்ட் இந்த மாதிரி அதிரடியாக விளையாடுவார் என்று. நீண்ட நாள் கிடைத்து இப்படி பேட்டிங் செய்துள்ளார் பொல்லார்ட். அனால் நிச்சியமாக அடுத்த போட்டியில் நாங்கள் வலுவான அணியாக போட்டியை எதிர்கொள்ளுவோம் என்று கூறியுள்ளார் ஸ்டீபன் பிளெமிங்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7 போட்டியில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது சிஎஸ்கே. அதில் அதிக ரன்கள் பட்டியலில் சிஎஸ்கே அணியில் டுப்ளஸிஸ் 320 ரன்களை அடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தில மொயின் அலி 206 ரன்களை அடித்துள்ளார். பவுலிங்கில் அதிக விக்கெட் எடுத்ததில் சாம் கரண் 9 விக்கெட்டையும், இரண்டாவது இடத்தில் தீபக் சாகர் 8 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.