இதை மட்டும் செய்யாமல் விட்டால் நிச்சியமாக அடுத்த போட்டியிலும் தோல்விதான்… ; தோனி அதிரடி விளக்கம் … !!
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021கான போட்டி சிறப்பான முறையில் சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை என்றாலும்.
அதன்பின்னர் பேட்டிங் செய்த சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மெயின் அலி, ஜடேஜா மற்றும் சாம் கரண் போன்ற வீரர் அதிரடியாக விளையாடி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளனர். பின்பு 189. ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் வித்தியசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் மற்றும் டுபலஸிஸ் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் அதிரடியாக விளையாடி 188 ரன்களை எடுத்தனர். 20 ஓவர் போட்டியில் 188 ரன்கள் என்பது நல்ல ரன் தான்… அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வியை குறித்து பேசிய தோனி ; நிஜமாகவே சுரேஷ் ரெய்னா ,ராயுடு, மெயின் அலி , ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 188 ரன்கள் மிகவும் நல்ல ரன்கள் தான், இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. எங்கள் அணியின் பவுளர்களிடம் செயல்படுத்தும் திறன் இல்லை. அதனால் இனிவரும் போட்டிகளில் பவுலிங் செய்யும்போது ஆட்ட திறனை சரியாக செயல்படுத்த வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் நிச்சயமாக தோல்விகள் தான் வரும் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால் புள்ளிப்பட்டியளில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.