விராட்கோலி பற்றி கபில் தேவ் சொன்ன கருத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா ; முழு விவரம் இதோ :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரில் 2- 2 என்ற நிலையில் இருந்த காரணத்தால் சம நிலையில் முடிந்துள்ளது. டி20 போட்டியில் களமிறங்கிய இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இந்திய அணி இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது இந்திய.

பின்பு நாளை முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி சமீபகாலமாக சரியாகவே பேட்டிங் செய்யாமல் விளையாடி வருகிறார். ஆமாம், இதுவரை 70 சதம் அடித்துள்ளார் விராட்கோலி. கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட்கோலியால் இதுவரை சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அதிரடி மன்னன் ஆக திகழ்ந்த விராட்கோலி இப்பொழுது போரம்-ல் இல்லாமல் இருப்பது வேதனையாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் விராட்கோலியை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சில முக்கியமான தகவலை பதிவு செய்தார். அதில் அஸ்வினுக்கு மட்டும் ஓய்வு கொடுத்தால், விராட்கோலிக்கும் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். இதனை சிலர் சரியாக உள்ளதாகவும், சிலர் தவறாக சொன்னதாகவும் கூறி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை பற்றி சில முக்கியமான தகவலை கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் கபில் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; ” அவர் (கபில் தேவ்) போட்டியை வெளியே இருந்து பார்க்கிறார். அதனால் அணியில் என்ன நடக்கிறது என்பதை பற்றி அவருக்கு தெரியவில்லை. எங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நன்கு தெரியும். நாங்க தான் அணியை உருவாகியுள்ளோம்.”

“நாங்க எப்பொழுதும் அணியில் இருக்கும் வீரரை ஆதரிப்பது வழக்கம், அதுமட்டுமின்றி வாய்ப்புகளையும் கொடுத்து வருகிறோம். அதனால் இந்த விஷயம் நிச்சயமாக வெளியே தெரிய வாய்ப்பே இல்லை. அதனால் வெளியே என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசிப்பது முக்கியமில்லை. அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று.”

விராட்கோலியை பற்றி பேசிய ரோஹித் சர்மா : ” ஒரு வீரரின் போரம் பற்றி பேசும்போது நிச்சியமாக அதில் ஏற்றம் இறக்கம் இருப்பது தான் உண்மை. ஆனால் எந்த வகையிலும் அவரது திறமை குறையாது. இதனை நாங்கள் எப்பொழுது மனதில் வைத்துக்கொண்டு தான் விளையாடுவோம். ஒரு வீரர் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடினாலும், ஒரு சில சீரியஸ் சரியாக விளையாடவில்லை என்பதால் அவர் மோசமான வீரர் என்று அர்த்தம் இல்லை என்று விராட்கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்ரோஹித் சர்மா.”