வேறு வழியில்லை இந்த இரு மாற்றங்களுடன் விளையாட வேண்டியுள்ளது ; ரோஹித் சர்மா பேட்டி ;

0

மூன்றாவது டெஸ்ட் போட்டி : இண்டோரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

ஆமாம், ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடிப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ரோஹித் சர்மா 12, மற்றும் சுப்மன் 21 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளனர்.

ப்ளேயிங் 11ல் நடந்த முக்கியமான மாற்றம் :

இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான கே.எல்.ராகுலின் பங்களிப்பு முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் ரசிகர்கள் இடையே பெரிய எதிர்ப்பு எழுந்தது.

அதனால் துணை கேப்டன் பதவியில் இருந்தும் அவரை வெளியேற்றியது இந்திய. அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில் மற்றும் ஷமி -க்கு பதிலாக உமேஷ் யாதவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா : ” நாங்க முதலில் பேட்டிங் செய்ய ஆசைப்படுறோம். இதே இடத்தில பல போட்டிகளில் விளையாடியுள்ளோம், இருந்தாலும் மற்ற மைதானத்தை விட இது வித்தியசமான ஒன்று. நாங்க இன்னும் WTC இறுதி போட்டிக்கு முன்னேறவில்லை. ஆனால் அதில் இங்கு நாங்க ஜெயித்து இறுதி போட்டிக்கு முன்னேற தான் வந்துள்ளோம். முதல் இரு போட்டிகளில் என்ன செய்தமோ, அதையே இப்பொழுது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ரோஹித் ஷர்மா.”

ப்ளேயிங் 11 விவரம் :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், முகமத் சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here