கோலி இல்லை ; இவங்க இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு மிகவும் முக்கியம் ; ரோஹித் சர்மா பேட்டி ;

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

இரண்டாவது போட்டியின் சுருக்கம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் மட்டுமின்றி, பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த நியூஸிலாந்து அணி 34.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 108 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 36, ப்ரஸ்வெல் 22, சன்டனர் 27 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி சுலபமாக கிடைத்தது. ஆமாம், 20.1 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 111 ரன்களை அடித்தனர்.

அதில் ரோஹித் சர்மா 5, சுப்மன் கில் 40*, விராட்கோலி 11, இஷான் கிஷான் 8* ரன்களை அடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா ஓபன் டாக் :

சமீபத்தில் இரண்டாவது ஒருநாள் பற்றி பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : “உண்மையிலும் இறுதியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் பவுலர்கள் ஒரு படி மேல் விளையாடி வருகின்றனர். நாம் என்ன எதிர்பார்கிறோமோ, அதற்கு ஏற்ப விளையாடி வருகின்றனர்.”

“உண்மையிலும் இது போன்ற பவுலிங் வெளிநாடுகளில் நடக்கும். ஆனால் இந்த முறை கடினமாக உழைத்து அதனை நிரூபித்துள்ளனர் இந்திய பவுலர்கள். இப்பொழுது அணியில் இருக்கும் வீரர்களை வைத்து நிச்சியமாக புது நம்பிக்கை கிடைத்துள்ளது. இதனை பார்க்க சந்தோசமாக தான் இருக்கிறது. இருப்பினும் ஷமி மற்றும் முகமத் சிராஜ் ஆகிய இருவரும் அட்டகாசமாக பவுலிங் செய்து வருகின்றனர்.”

“இவர்கள் இருவரும் அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிக்கு முக்கியமான வீரர்கள். அதனை அவர்களுக்கு அடிக்கடி நியாபகம் செய்து கொண்டே வருகிறேன். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. நான் இப்பொழுது தான் போட்டிகளில் ஒரு சில விஷயங்களை மாற்றி கொண்டு வருகிறேன். அதில் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதுதான் சரியானதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”