நாங்க ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறோம் ; இந்த விஷயத்தில் என்ன வேண்டுமானலும் நடக்காமல் ; ஹார்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

ஐபிஎல் 2022: நேற்று அஹமதாபாத் -ல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022யின் இறுதி போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நாயகன் ஜோஸ் பட்லர் எதிர்பாராத விதமாக 39 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

பின்பு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதனால் இறுதி வரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 130 ரன்களை அடித்தது. அதில் ஜெய்ஸ்வால் 22, பட்லர் 39, சாம்சன் 14, ஹெட்மேயேர் 11, ரியன் பராக் 15 ரன்களை அடித்தனர்.

பின்பு 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி. வழக்கம்போல தொடக்க வீரரான சஹா பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் சுமன் கில், ஹார்டிக் பாண்டிய மற்றும் டேவிட் மில்லர் ஆகிய மூவரும் அதிரடியான ஆட்டத்தால் போட்டியை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 133 ரன்களை அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

போட்டி முடிந்த பிறகு பேசிய ஹார்டிக் பாண்டிய ; “இந்த உலகத்தில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இந்த அணி (குஜராத் ) எடுத்துக்காட்டாக உள்ளது. ஒரு அணியாக சரியாக விளையாடினால், சரியான அணியை தேர்வு செய்தால் நிச்சியமாக பல ஆச்சரியங்கள் நடக்கும்.

“நானும் (ஹர்டிக்) ஆசிஷ் நெஹ்ரா எப்பொழுது ஒரு சரியான பவுலராக தான் விளையாடுவோம். பேட்ஸ்மேன்கள் எப்படி ரன்களை அடிக்க வேண்டிய சுழல் ஏற்படுத்தாது வழக்கம் தான். ஆனால் ஒரு சில போட்டிகளில் பேட்ஸ்மேன்களை தாண்டி பவுலர்கள் தான் பல போட்டியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.”

“நாங்கள் பல போட்டிகளில் வென்றுள்ளோம். ஆனால் எப்பொழுது தோல்வி பெறுகிறோமோ, அப்பொழுது என்ன தவறு செய்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதை கவனிப்போம். இன்னும் பல வீரர்கள் இந்த அணியில் விளையாட உள்ளனர். அதனால் ஒரு புதிய அணி அறிமுகம் ஆன முதல் ஆண்டில் கோப்பையை வென்றது சிறந்த ஒரு விஷயம் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here