தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் இல்லாததற்கு காரணம் இதுதான் ;

இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலமாக பல இளம் மற்றும் புதிய திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் டி-20 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் களமிறங்கி விளையாடினார் தமிழக வீரர் நடராஜன்.

அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக விளையாடி யாக்கர் மன்னன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். அதன்பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றார் நடராஜன். ஒரு சில போட்டிகளுக்கு பிறகு நடராஜனுக்கு இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2021 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக உம்ரன் மலிக் அணியில் இடம்பெற்றார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார் என்பது தான் உண்மை. 11 போட்டிகளில் 18 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் நடராஜன்.

சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் கூறுகையில் ; “ஐபிஎல் போட்டிகள் நடக்கும் போது வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதனால் தான் எங்கள் அணிக்கான வெற்றி வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.”

“நாங்க இன்னும் பல வேலை செய்ய வேண்டியுள்ளது. அதில் மாற்றமே இல்லை. போட்டிகள் நடந்த நேரத்தில் சில மோசமான நிகழ்வு தான் சரியான வெற்றிகளை பெற முடியாமல் போனது என்று கூறியுள்ளார் டாம்.” அதுமட்டுமின்றி சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி இறுதியாக விளையாடிய போட்டியில் கூட நடராஜன் விளையாடவில்லை.

வருகின்ற ஜூன் 9ஆம் தேதி முதல் ஐந்து டி-20 போட்டிகள் தென்னாபிரிக்கா அணியுடன் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதற்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. அதில் நடராஜன் பெயர் இல்லது அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ஐபிஎல் 2022 போட்டிகள் சிறப்பாக விளையாடி வந்துள்ளார் நடராஜன்.

காயம் காரணமாக தான் அவரை அணியில் எடுக்கவில்லையா ? அல்லது என்ன காரணமாக இருக்கும் உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்னுங்க..!