இந்திய கிரிக்கெட் அணியை பழிதீர்த்து கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர் ; பா..! செம பவுலிங்..! தோல்விக்கு இவர் ஒருவர் தான் காரணம் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் வழக்கம்போல பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்டி முதலில் களமிறங்கியது இந்திய.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். அவர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் விளையாடியதால் தொடர்ந்து விக்கெட்டை இழந்துகொண்டே வந்தனர்.

அதனால் 19.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 138 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 0, சூர்யகுமார் யாதவ் 11, ஸ்ரேயாஸ் ஐயர் 10, ரிஷாப் பண்ட் 24, ஹர்டிக் பாண்டிய 31, ரவீந்திர ஜடேஜா 27, தினேஷ் கார்த்திக் 7, ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி காத்துக்கொண்டு இருந்தது. சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 141 ரன்களை அடித்து இந்திய அணியை 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

அதனால் ஐந்து டி-20 போட்டிக்கான தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சூரியகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடி 190 ரன்களை அடித்தனர்.

ஆனால் இரண்டாவது போட்டியில் சரியாக விளையாட முடியாமல் தவித்தது இந்திய கிரிக்கெட் அணி. அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர் Obed McCoy-வின் அதிரடியான பவுலிங் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

ஏனென்றால் போட்டி ஆரம்பித்த முதல் பந்தில் ரோஹித் சர்மா விக்கெட்டை கைப்பற்றினார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் சிறப்பாக பவுலிங் செய்து ரோஹித், தினேஷ் கார்த்தி, சூரியகுமார் யாதவ் போன்ற முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 4 ஓவர் பவுலிங் செய்த Obed McCoy 17 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டை கைபற்றியுள்ளார். இவரது பந்து வீச்சால் இந்திய அணி திணறியதுதான் உண்மை.