முன்பு தோனி இப்பொழுது ரோஹித் சர்மா, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வருகின்றனர் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் பேட்டி ;

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மற்றும் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதல் ஒருநாள் போட்டியில் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதி வரை போராடி 43.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன்களை மட்டுமே கைப்பற்றினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 57 ரன்களை அடித்துள்ளார்.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் 28 ஓவர் முடிவில் 178 ரன்களை அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய.

அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான பூரான் விக்கெட்-க்கு சரியான நேரத்தில் ரீவ்யூ கேட்டார் இந்திய கேப்டனான ரோஹித் சர்மா. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் ;

ஒருவேளை ரோஹித் சர்மா அந்த இடத்தில் இருந்திருந்தால் நான், தோனி Referral என்று சொல்லிருப்பேன். ஆனால் இப்பொழுது நான் கமென்டரி செய்து கொண்டு இருந்த நேரத்தில் ரோஹித் சர்மா சரியான நேரத்தில் ரீவ்யூ கேட்டதால், அதனை நான் ரோஹித் சர்மா Referral என்று சொன்னேன்.

ரீவ்யூ சில நேரங்களில் தவறாக கூட முடிய அதிக வாய்ப்பு உள்ளது. இந்த இடத்தில் தான் விக்கெட்டை கீப்பரின் முக்கிய துவம் உள்ளது. ஏனென்றால் விக்கெட் கீப்பருக்கு மட்டும் தான் தெரியும் பந்து எந்த இடத்தில் பட்டது என்று. ஆனால் நேற்று நடந்த சம்பவத்தில் ரிஷாப் பண்ட் சத்தம் போடாதது அதிர்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றும். அப்படி இல்லையென்றால் மூன்றாவது ஒருநாள் போட்டி போட்டியாக மாறிவிடும்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்…!