இந்த ஐபிஎல் அணியின் அடுத்த கேப்டன் யார் ?? குழப்பத்தில் ரசிகர்கள்….

ஐபிஎல் 2021; வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது ஐபிஎல் 2021. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் இருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் மொத்தம் 8 அணிகள் உள்ளன. அதனால் போட்டிகளில் சுவாரஸ்யதுக்கு பஞ்சமில்லாத போட்டியாக ஐபிஎல் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்தியா அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் பலமான அடிபட்டுவிட்டது. அதனால் அவருக்கு ஆபரேஷன் செய்யும் நிலைமை கூட வரலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

அவ்வாறு ஆபரேஷன் செய்தால் அவர குறைந்தது இரு மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த அன்பிஎல் போட்டியிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விடும். ஸ்ரேயாஸ் ஐயர் தன டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இறுதி வரை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார் ஸ்ரேயாஸ். அவருக்கு அடிபட்டு விட்டதால் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Read Also : நான் கூடிய விரைவில் திரும்பி வருவேன்…!! இந்தியா வீரர் , டெல்லி கேப்பிட்டல் கேப்டனின் ட்விட்டர் பதிவு…!

இந்த ஐபிஎல் அணியின் அடுத்த கேப்டன் யார் ?? குழப்பத்தில் ரசிகர்கள்….

இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் ரவிச்சந்திர அஸ்வின், ஸ்டீவ் ஸ்மித் , ரஹானே ஆகிய மூன்று வீரர்களையும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியினர் கைப்பற்றியுள்ளது. இதில் ரவிச்சந்திர அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்துள்ளனர்.

அதனால் இதில் யாருக்கு கேப்டன் பதவி போகும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இது அதிக முறை கேப்டனாக இருந்தது ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தான். அதனால் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்பது பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்…!