இந்திய அணியில் இவர் எதற்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை ; ரசிகர்கள் ஆவேசம் ;

நியூஸிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் கடந்த 25ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் 1 – 0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் இருக்கின்றனர். இன்று காலை 7 மணியளவில் நடைபெற தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 22 ஓவர் முடிவில் 97 ரன்களை அடித்த நிலையில் மூன்று விக்கெட்டை இழந்துள்ளது இந்திய. அதில் ஷிகர் தவான் 28, சுப்மன் கில் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 36*, ரிஷாப் பண்ட் 10, சூர்யகுமார் யாதவ் 1* ரன்களை அடித்துள்ளனர்.

வழக்கம் போல் சொதப்பிய ரிஷாப் பண்ட் :

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வருகிறார் ரிஷாப் பண்ட். ஆனால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறாரா என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை. சமீப காலமாகவே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் விளையாடி வருகிறார் ரிஷாப் பண்ட்.

இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிக்கான தொடரில் ரிஷாப் பண்ட் 6,11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் 15, 10 ரன்களை மட்டுமே அடித்து வருகிறார். தொடர்ந்து மோசமான நிலையில் விளையாடி வரும் ரிஷாப் பண்ட் -க்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எப்பொழுதும் 7வதாக பேட்டிங் செய்து வரும் ரிஷாப் பண்ட், இந்த முறை டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார். இதனை சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசத்துடன் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட் மட்டும் தான் திறமையான விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன் ஆ ?