மும்பைக்கு எதிரான போட்டியில் ஏன் நட்ராஜன் இல்லை ? அவரை அணியில் இருந்து விலகிவிட்டார்களா..?? குழப்பத்தில் ரசிகர்கள்..!

மும்பைக்கு எதிரான போட்டியில் ஏன் நட்ராஜன் இல்லை ? அவரை அணியில் இருந்து விலகிவிட்டார்களா..?? குழப்பத்தில் ரசிகர்கள்..!

மேட்ச் 9: நேற்று சென்னை மைதானத்தில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய ரோஹித் சர்மா மற்றும் டி-காக் சிறப்பான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 150 ரன்களை எடுத்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 40 ரன்கள், டி-காக் 32 ரன்கள், சூரியகுமார் யாதவ் 10 ரன்கள், இஷான் கிஷான் 12 ரன்கள், பொல்லார்ட் 35 ரன்கள் எடுத்துள்ளனர்.

பின்பு 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி எதிர்பாராத விதமாக அணைத்து விக்கெட்டையும் இழந்து 13 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை சந்தித்தது. அதில் அதிகபட்சமாக வார்னர் 36 ரன்கள், பரிஸ்டோவ் 43 ரன்கள், மனிஷ் பாண்டே 2 ரன்கள், விஜய் ஷங்கர் 28 ரன்கள் மற்றும் அப்துல் சமத் 7 ரணங்கள் எடுத்துள்ளனர்.

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐராபாத் அணி மூன்று போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்து யாக்கர் மன்னன் நட்ராஜன் ஏன் அணியில் இல்லை என்ற கேள்வி எழுந்தது??

அதற்கு பதிலளித்த சன்ரைசர்ஸ் ஐராபாத் அணியின் பயிற்சியாளர்; அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த சில மாதங்களாக அவர் இந்திய அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதனால் அவருக்கு சில போட்டிகளில் இருந்து ஓய்வு கொடுத்துள்ளோம்.

அவர் மீண்டும் அணியில் இணைந்து விளையாடுவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி நட்ராஜனுக்கு பதிலாக அணியில் கலீல் அஹ்மத் இடம்பெற்றுள்ளார். அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் 4 ஓவர் பந்து வீசி 24 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.